Monday, August 15, 2011

மெல்லத் தமிழினிச் சாகுமா ??

இன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நீயா நானாவில் சில பேரின் பேச்சு நமக்கு கிடைத்த சுதந்திரம் நல்ல விதமாகத்தான் பயன் படுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பியது.. ஒரு நண்பர் கேட்கிறார் " நான் தாய்மொழியில் பேச முயற்சிப்பதால் எனக்கு என்ன லாபம்.... தாய் மொழி என்பது உணர்ச்சி பூர்வமான விஷயம் அல்ல என்றாலும்.. நமக்கான அடையாளம் அது என்ற விதத்திலாவது நாம் நம் மொழியை வளமானதாக வைத்திருக்க வேண்டும்...

மொழி என்பது பிற கலப்பில்லாது இருக்க வேண்டும் என்பதற்காக தான் தாய் மொழி என்கிறோம்.. தந்தையில் கூட கலப்பு இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் கூட தாயின் பெயரை வைத்திருக்கலாம்.

நம் மொழியின் கலைச்சொல் வளர்ச்சிக்கு எந்த பங்களிப்பும் கொடுக்காது.. இருக்கின்ற கலைச்சொற்களை உபயோகமும் படுத்தாமல் வெறும் பழிச்சொல் மட்டும் பேச வருகின்ற தலைமுறையினர் மிகுந்து வருவது தற்கொலை முயற்சிக்கு சமமான ஆபத்து...

மொழி சார்ந்த ஆக்க பூர்வமான முயற்சிகளை முன்னெடுத்து செல்ல வேண்டிய பலர் அரசியல் சார்புள்ளவர்கள் ஆக இருப்பது பெரும் சாபக்கேடு.. மொழியியல் அறிஞர்களும் ஏதேனும் ஒரு பக்கம்
சார்பு நிலை எடுத்து தான் தங்கள் வாழ்வை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலை..

தமிழ் இனி மெல்ல சாகுமா ???

Friday, August 12, 2011

குட்டியாய் இயற்கை...

தொலைவிலிருக்கும் போது நிலவாக
தொட்டுத்தழுவும்போது தென்றலாக
கோபப்படுகையில் சுடர் சூரியனாக
கொஞ்சும்போது குளிர் நீராக
ஆசை வைப்பதில் மலையாக
அன்பு காட்டுவதில் ஓர் அருவியாக

இப்படி எனக்கான உலகம் முழுவதும் நீயாகவே இருக்கிறாய் என் குட்டி !!!

நீ நீயாய் நான் நானாய்....

அழுக்கு நிலவிலிருந்து எட்டி பார்கிறேன் ,
நட்சத்திரங்களின் வழியே கண் சிமிட்டுகி்றேன்,
நீல வான் வெளியாய் உன்னை அணைக்க பார்க்கிறேன்,
திறந்திருக்கும் ஜன்னல் வழியே காற்றாய் நுழைகிறேன்,
நீ கட்டும் ஆடையில் நூலாய் இழைகிறேன்,
கண் சுருக்கி நீ சிரிக்கையில் செத்து போகிறேன் ...