Saturday, December 24, 2011

உண்மையில் பெட்டி தான் முட்டாளா?

முட்டாள் பெட்டி என்று அழைக்கப்படும் டிவி யின் முன்பு தான் எங்கள் பொழுது எல்லாம் கழிகிறது... அதுவும் டாக்கா வில் வேலைக்கு வந்த பின் வேறு பொழுது போக்கு எதுவும் இலாத ஒரு நகரத்தில்... செட் டாப் பாக்ஸின் வழியே வரும் ஒரு சில ஊடகங்களை தவிர வேறு எதுவும் பொழுது போக்கு இல்லை என்ற நிலை வந்து விட்டது..தமிழ் பேசும் மற்றும் பேசாத இந்தியர்கள் கணிசமான பேர் இருந்தும் நண்பர்களாக நம் பொழுதுகளை நிரப்பும் அளவிற்கு இன்னும் யாரும் வராத நிலையில் டிவியன்றி வேறு பொழுது போக்கு ஏது..

என்னுடைய இத்தனை வருட வாழ்க்கையில் டிவியை இவ்வளவு தூரம் அண்டியிருக்க வேண்டிய நிலை வந்தது இப்போதுதான்...

தமிழகத்தின் முன்னணி சேனல்கள் எல்லாம் தெரியும் நிலையில் .. எனக்கு தோன்றியதெல்லாம் இது தான்..ஒரு சாதாரண பார்வையாளன் ஆகிய எனக்கே எந்த சேனலின் நிகழ்ச்சிகளும் தரம்ஆகவோ சுவராஸ்யம் ஆகவோ இல்லை என தோன்றும் பொது நம் சேனல்கள் அறிவை வளர்க்க எந்த பலனும் கொடுக்க போவது இல்லை என்பதே தெளிவு ...

சமீபத்தில் ஒரு சேனலில் குழந்தை பராமரிப்பு பற்றிய ஒரு நிகழ்ச்சி (அப் கோர்ஸ், விளம்பரதாரர் நிகழ்ச்சி தான்) பார்த்த பொது தான் கணக்கு போட ஆரம்பித்தேன். நாள் முழுக்க தேடி பார்த்தாலும் சுவையான மற்றும் பயனுள்ள நிகழ்ச்சிகள் எத்தனை என்று.. ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கூட உங்களால் நல்ல நிகழ்ச்சி பார்க்க முடியாது..

இது கற்பனை வறட்சி யா இல்லை எது வேண்டுமானாலும் ஒளிபரப்பலாம்.. மக்கள் பார்ப்பார்கள் என்ற மமதையா ..

இது எல்லாம் பார்க்கும் போது அந்த பெட்டி தான் முட்டாளா என்ற குழப்பம் வரவில்லை ?