தனியே ...
கிழக்கு நோக்கிய சன்னலில் வரும் கதிர் வெளிச்சம்
உன்னைப்போலவே என்னருகில் படுத்திருக்கிறது ...
எந்த சலனமும் இல்லாத மௌனம் நீ
கோபமாயிருக்கும் கணங்களைக்கொண்டு வருகிறது..
கீச் கீச்சென்று வரும் குருவிகளின் சத்தம் ,
மிதமாகவும் அதிர்வாகவும் நீ பேசிய பேச்சுக்கள் தானே.
விட்டு விட்டு என்னை திட்டியோ, சிரிக்க வைத்தோ
வரும் வாட்ஸப் குறுஞ்செய்திகள் தான் நாட்களை நகர்த்துகின்றன
உனக்கும் எனக்கும் ஒரு சேர மகிழ்ச்சி தரும்
நம் குழந்தை வரும் நாளை நோக்கி....