அன்னையவள் அன்பைத்தந்தாள்
ஆசிரியை போல் அறிவைத்தந்தாள்
இன்ப துன்பம் எல்லாம் அறிய
ஈன்றவளே கற்றுத்தந்தாள்
உண்ண உணவும் உடுப்பும் தந்து
ஊன் பசி ஆற்றித்தந்தாள்
எண்ணம் எல்லாம் சீராக்கி
ஏற்றம் பெற வழியைத்தந்தாள்
ஒழுக்கம் விழுப்பம் எல்லாம்
ஓய்வின்றி ஓதித்தந்தாள்
ஔவ்வை போல் ஆதித்தமிழை
அப்பழுக்கின்றி கற்றுத்தந்தாள்
என் உயிரெழுத்தாக தாய் இருக்கிறாள்
மெய்யெழுத்தாக நீ என் உயிர் நிரப்பினாய்.
உங்கள் அன்பிற்கு ஈடு செய்ய எதுவுமில்லை இந்த தமிழ் தவிர..
No comments:
Post a Comment