இன்னும் ஒரு விருதுய்யா .. என்று சொல்லுமளவிற்கு தான் இருக்கிறது..ஏற்கனவே ஏகப்பட்டது வாங்கி குவித்தாகிவிட்டது ..நாளைக்கே ஆஸ்கார் கொடுத்தாலும் கூட இப்படி தான் இருக்கும் போல.. இந்த விருதுகளை எல்லாம் பத்திரமாக ( ஷோகேஸில் தான் ) வைத்து பராமரிப்பதற்கே கமல் தொடர்ந்து படம் எடுத்து சம்பாதித்து கொண்டிருக்கணும் போல இருக்கிறது..
கொஞ்ச வருடமாக அவரை படங்களை தாண்டி கவனிப்பவர்களுக்கு ஓன்று புரியும்..அண்ணன் படம் எடுக்கும் நேரம் போக மீதி நேரங்களில் செலவு செய்வதெல்லாம் மிக உற்சாகமாக கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் போல மனிதர்களுடன் தான்.. நினைத்துப்பாருங்கள் நமக்கெல்லாம் இது போல ஒரு கற்பனை இல்லையா ..ரிட்டயர்மெண்ட் வயசுல வருமானம் வரணும், நான் அக்கடான்னு கால் மேல கால் போட்டுக்கிட்டு என் பிரண்ட்ஸோட ஜாலியா இருப்பேன்..இப்படி நினைக்காத ஐடி ஆளுங்களே இல்லைன்னு சொல்வேன் ..என்ன ஒரு வித்தியாசம் , தலைவருக்கு அந்த வயசு தானே தவிர ரிட்டயர்மெண்ட் எல்லாம் ஆகல...ஆனா இப்படி ஒரு சந்தோசமான வாழ்க்கையை வாழறதுக்கே அவரை பாராட்டணும் ...
அப்புறம் இன்னொரு விஷயம், கொஞ்ச வருஷமா உத்து கவனிச்சீங்கன்னா, அவர் போயி பேசற இடமெல்லாம் பெத்த இடம், சும்மா பிலிம் காட்டறவா எல்லாம் போக முடியாது ...நெஜமாலுமே பிலிம் காட்டறவங்க தான் போக முடியும்.. ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி, கூகிள், நாஸ்காம், ஐ ஐ டி, ஐ ஐ எம் இங்கெல்லாம் அவரை பேச, குரூப் டிஸ்கஷன் பண்ண இப்படி கூட்டிட்டு போயிருக்காங்க ..
அந்த வீடியோ எல்லாம் யூடியூப் ல இருக்குது ..சமயம் கெடச்சா போய் பாருங்க .. அவரு எவ்ளோ தெளிவா அப்டுடேட் ஆ இருக்காருன்னு புரியும்.. நாம எல்லாம் அவரு படத்த பார்த்துட்டு அது சரியில்ல இது சரியில்லைன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கறோம்..ஆனா ஒவ்வொரு படத்துலயும் ஒரு ரிசர்ச் பண்ணி தான் எடுக்கறாரு .. இத்த உடுங்க ..15-20 வருஷம் முன்னாடி வந்துச்சே அபூர்வ சகோதரர்கள்னு ஒரு படம் ..அத எப்படி எடுத்தோம்னு இப்போ சாதாரணமா சொல்றாரு.. இன்னும் அந்த டெக்னாலாஜியே நமக்கு எல்லாம் புரியல (புரிஞ்சவங்க இருந்தா போன் பண்ணி சொல்லுங்க, கமெண்ட்ல திட்டாதீங்க )..இப்போ அவர் பண்றதெல்லாம் நம்ம பசங்களுக்கு தான் புரியும் போல ...
எத்தினி லாங்க்வேஜ் பேசறாரு, சினிமாவுல எத்தினி டெக்னிக் இருக்குதோ எல்லாத்துலயும் மூக்கு மட்டுமில்ல மொத்த உடம்பையும் வுட்டுருக்காரு, அசராம நல்ல நல்ல படமா எடுத்து விடறாரு ...ஆனா அவரையே இந்த நாட்டை விட்டு போறத தவிர வேற வழியில்லன்னு சொல்ல வெச்ச ஆசாமிங்க தான நாம..
என்னமோ போங்க சார்..எனக்கென்னமோ..நடிப்பை தாண்டி எவ்ளவோ சாதனை பண்ணினத்துக்கு தான் இந்த அவார்டுன்னு தோணுது...இல்லைனா ஐஸ்வர்யா ராய் மேடம்கெல்லாம் குடுத்த பிறகு இவருக்கு குடுப்பாங்களா ..அப்புறம் எவ்ளோ நாலு தான் அவரு நடிச்சதையே பாராட்டி பேசறது. நமக்கும் சலிச்சிருச்சு அவருக்கும் சலிச்சிருச்சு ..அதான் அவரே எல்லா டிபார்ட்மெண்ட்லயும் பூந்து கலக்கறாரு ..நாமளும் பண்ணுவோம்...செய்யற தொழிலை நேர்த்தியா அழகா விஷயம் தெரிஞ்சு புதுமையா பண்ணுவோம் ..வெற்றி தோல்வி பற்றி ரொம்ப அலட்டிக்க கூடாது முக்கியமா அந்த நாலுபேரு ( அதாங்க சமூகம் ) அது என்ன சொல்லுதுன்னு விளக்கு வெச்சு உக்காந்து கேட்டுட்டு இருக்க்கப்படாது..இது தான் கமல் இந்த விருது மூலமா நமக்கு சொல்ற மெசேஜ் ..போங்கய்யா போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்க ..பாடப்புத்தகம் மட்டுமில்ல சார் எல்லாத்தையும் தான் .../
No comments:
Post a Comment