கொள்கைகளையும், வளர்ச்சியயும் பற்றி பேச சொன்னால் தனிமனித தாக்குதலில் தான் முடிகிறது,
அவர்கள் செய்த ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு விவரங்களையும் அதில் சம்பந்தப்பட்டிருக்கும் பணத்தின் மதிப்பையும் பார்த்தால் தலை சுற்றுகிறது,
ஒருபக்கம் பார்த்தால், உழைப்பு சுரண்டல், போலி திவால் அறிவிப்பின் மூலம் வங்கிகளை ஏமாற்றி ஊழல்,
மறுப்பக்கம் பார்த்தல் பெரிய கார்ப்பரேட்டுகளுக்கு பயனளிப்பதற்க்காக சட்டத்தை வளைத்த குற்றசாட்டு, ஆதாரங்களை அழித்த குற்றசாட்டு,
சாதிப்பாகுபாடுக்கு சற்றும் குறைவில்லாத இனப்பாகுபாடு, அதன் விளைவான தாக்குதல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு,
காவல்துறையின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கை, காவல்துறையின் பயிற்சி குறைபாடு, மக்களுக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துதல் பற்றிய பிரச்சினை, ஆயுத கலாசாரம்,
வேலை இழப்பு, வேலை இல்லா திண்டாட்டம், நிறுவனங்கள் வெளியேறுதல், வெளிநாட்டுப்பொருட்களின் ஆதிக்கம்,
பல வருடம் ஆட்சியில் இருந்த பின்னும் வளர்ச்சி பற்றி திட்டம் தீட்டுவோம், வறுமையை ஒழிப்போம், வேலை வாய்ப்பு பெருக்கப்படும் போன்ற பேச்சுக்கள்,
இணைய குற்றங்கள், தேச பாதுகாப்பில் மக்களுக்கு நம்பிக்கையில்லாத நிலை,
உள்நாட்டுக்கடன் அதிகரிப்பு, வெளிநாடுகளில் செலவு செய்யும் நிலை,
பொய்க்குற்றசாட்டுகள், தனி மனித தாக்குதல், பேச்சு மாற்றிப்பேசுதல்
இப்படி பல விஷயங்கள் நம்மூரு உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் அளவுக்கு இருந்தாலும், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சார விவாதம் கார சாரமாக, பார்க்கும் விதத்திலும், பெரும்பாலும் கோட்பாடு அடிப்படையிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தாலும் ஊசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியுடனும் இருப்பது போல பல கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை கொண்டுள்ளது,
இருந்தாலும், இந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தை நமது தேர்தலில் ஒப்பிட்டு பேசி நமது தேர்தல் முறையை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்ல முயற்சிகள் நடந்திருக்கின்றது..
அமெரிக்கா போல அல்லாமல், நமது நாட்டில் தனி மனித வாழ்வில் மாற்றங்களை கொண்டு வர பிரதமரின் பங்கு மிக மிக குறைவு.. உண்மையாகவே சொல்லப்போனால் நதி நீர் பிரச்சினை போன்ற பெரிய பிரச்சினையிலும் கூட பிரதமரின் சட்டப்பூர்வ அதிகாரமோ அல்லது ஆர்வமோ பெரிதாக இல்லை.. நேரு காலத்திலும் இது தான் நடந்தது, அவரை பெரிதாக விமர்சித்து பதவிக்கு வந்த மோடி காலத்திலும் அதே தான்..
ஒரு சிறந்த பிரதமரின் காலத்திலும் மோசமான முதல்வர்களை கொண்டிருந்த, அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்த மாநிலங்கள் மோசமான வளர்ச்சியைதான் சந்தித்து வந்திருக்கிறது..
ஏன் கிட்டத்தட்ட 5 பிரதமருக்கு மேல் நாட்டுக்கு தந்த உ பி யில் வளர்ச்சி தமிழ்நாட்டை விட எப்போதுமே குறைவு தான்.. நாட்டின் வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பை தரும் மகாராஷ்டிராவிலோ தமிழ்நாட்டிலோ இருந்து எந்த பிரதமரும் வரவில்லை, இந்த மாநிலங்களின் நிலைக்கு எந்த பிரதமரும் நேரடியாக காரணமில்லை,
உண்மையில் நமது வளர்ச்சி, முதல்வர், எம் எல் ஏ, கவுன்சிலர், சில விஷயங்களில் எம் பிக்கள், பஞ்சாயத்து தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், நல்ல இடைநிலை கீழ்நிலை அதிகாரிகள் என எல்லாரிடமும் இருக்கிறது,
இவ்வளவு நேரம் முக்கி முக்கி அமெரிக்க வரை எக்ஸாம்பிள் சொல்லி இந்த பதிவை எழுத காரணம், உள்ளாட்சி தேர்தல் வருகிறது.. கட்சிக்கு இங்கே வேலை இல்லை, அந்த பகுதி மக்களின் நம்பிக்கை பெற்ற நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் .. மோடி பிரச்சாரத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை இங்கே தனி ம்னிதர்களுக்கு , நல்ல மனிதர்களுக்கு கொடுங்கள் ...வளமான பஞ்சாயத்து ராஜ் வளமான இந்தியாவுக்கு அடிப்படை ...மனதில் வைத்து வாக்களியுங்கள் ...

No comments:
Post a Comment