பண்பாடு மறந்தோம்!!
ஈராயிரமாண்டாய் ஈன்றெடுத்த
கலைச்செல்வம் மறந்தோம் !!
ஆதி முதல் இடையிடையே
ஒற்றுமை இழந்தோம் !!
ஆழியூடே ஓடி வந்த
ஆங்கிலேயருக்கு அடிபணிந்தோம்!!
அரையும் குறையுமாய் அவர் தம்
கலாச்சாரம் கற்றோம் !!
அதுவே காலத்திற்கும் சோறிடுமென
கற்பனை வளர்த்தோம் !!
சீனா, ஜப்பான், ஜெர்மன், பிரெஞ்சு போல
தாய்மொழியில் கல்வியும் தொழிலும்
செய்யும் நாளே தமிழ்த்திருநாள் !!
அது வரை நம் உள்ளத்தீ வளர்த்திருப்போம் ..
நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுத்தருவோம் !!
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!
No comments:
Post a Comment