Wednesday, October 24, 2012

வானவில்லா? வண்ணவில்லா?


என் வாழ்க்கையில் முதன் முதல் நான் ஒரு முழுமையான வானவில்லை பார்த்த பொது எனக்கு 25 வயதிருக்கும் என்று நினைக்கிறேன், திருப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த போது அவினாசி வந்து கோவை செல்லும் பேருந்தை பிடிப்பது வாடிக்கையாக இருந்த சமயம், அப்படியான சமயங்களில் ஒரு மழைக்கால மாலை வேளையில் அவினாசி புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிய போது, அவினாசி - கோவை சாலையின் நீட்சி காரணமாகவும், பெரிய கட்டிடங்களின் மறைப்பு இல்லாததாலும் தூரத்தே மேற்கு தொடர்ச்சி மலைகளைத் தாண்டிய தொடுவானத்தில் அந்த ரம்மியமான மாலைப்பொழுதின் வெயில் மழைக்களப்பில் உருவாகி நின்ற ஒரு முழுமையான வானவில், என்னை சில நிமிடங்கள் உறைய வைத்து பெய்யும் தூரலிலேயே நிற்க வைத்தது.. அது தான் நான் பார்த்த அல்லது என் நினைவில் நிற்கிற முதல் வானவில் காட்சி..

எனக்கென்னவோ வானவில் என்பது ரெயின்போ எனும் ஆங்கிலச்சொல்லின் தமிழாக்கம் போலவே, ஒரு அன்னியத்தன்மையோடே தோன்றுகிறது. வானவில்லின் வண்ணம், அதன் தோற்றம், அழகு, தோன்றுகிற இடம், அந்த சூழலின் ரம்மியம் இதையெல்லாம் பிரதிபலிக்கின்ற ஒரு பெயர் தான் வானவில்லுக்கு இருக்க முடியும். என்னுடைய இலக்கிய அறிவின் (!?#%) எல்லைக்குள் தேடி ப்பார்த்து விட்டுத்தான் எழுத ஆரம்பிக்கிறேன், யாரேனும் சொல்லுங்களேன் வானவில்லின் உண்மையான அந்த அழகுப்பெயர் என்னவென்று

No comments:

Post a Comment