Friday, October 12, 2012

வாழ்வின் பொழுதுகள் !!!


என் வாழ்வின் சிறப்பான பகுதியை

உன்னை கவர்வதில் செலவழித்து விட்டேன்

உன்னுடனான பிந்தைய பொழுதுகளில், நான்

மென்மையானவனாக இல்லாவிடில், பழி எனக்கல்ல..

நம்முடைய நேரங்களில் எது சிறந்த நேரம்.

நீ பேசி நான் கேட்டுக்கொண்டிருப்பதா

நான் பேசி நீ கேட்டுகொண்டிருப்பதா

இல்லை பேசாமல் கழித்த பொழுதுகளா, அல்லது

இருவரும் பேசிக்கழித்த பொழுதுகளா

நம் பொழுதுகளை நிறைத்த நேரம் யாருடையது

நேரங்களின் உரிமையாளர் யாரென தெரிவதில்லை

வாழ்க்கை நம் பொழுதுகளை நிரப்பியிருக்கிறது

அதை கொண்டாட மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறோம் ...

No comments:

Post a Comment