Friday, March 8, 2013

நாசூக்கு..

கிங் காங் படத்தை விஜய் டிவியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.. அந்த காட்டுவாசிகளை காட்டும் காட்சியிலும், அவர்களின் தோற்றத்திலும் தெரியும் தொழில் முறை நேர்த்தி தான்  ஏன் நாம் ஹாலிவுட் படங்களை பார்க்கிறோம் என்று உணர்த்துகிறது, நம் படங்களில் உள்ள காட்டுவாசிகளெல்லாம் உற்றுப்பாருங்கள், நன்றாக மேக்கப், லிப்ஸ்டிக் போட்டு, டைட் ஃபிட் உடை அணிந்து அதற்கு மேல் இலை தழைகளை அரைகுறையாக மூடி, மறக்காமல் தொப்புள் தெரியச்செய்து, கொஞ்சம் க்ளீவேஜ் தெரியுமாறு இருந்தால் அவள் தான் காடுவாசி பெண்... காட்டுவாசி ஆண் சொல்லவே வேண்டாம், க்ளீன் ஷேவ், நீள முடி.. முடிந்தால் கையில் ஒரு குச்சியோ கம்போ.. இது ஹாலிவுட் படங்களை உயர்த்தி சொல்லும் விஷயம் அல்ல.. அதே கிங் காங் படத்தில் நம்ப முடியாத லாஜிக் இல்லாத எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது.. ஆனால் ப்ரொஃபெஷனலிசம் என்ற ஒன்றை நாம் மதிப்பது இல்லையோ என்று தோன்றுகிறது.. வடிவேலு பாஷையில் சொல்வதானால் பில்டப் பண்றமோ பீலா விடுறமோ நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்.. நாசூக்கு என்பது தான் ப்ரொஃபெஷனலிசம் என தோன்றுகிறது..